செய்திகள்
ஜம்முவில் கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி

ஜம்முவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

Published On 2019-08-23 17:26 GMT   |   Update On 2019-08-23 17:26 GMT
ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜம்முவிலும் கிருஷ்ண ஜெயந்தியை மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்து கடவுள்களின் வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News