செய்திகள்
ஸ்ரீநகர்

வன்முறை எதிரொலி: ஸ்ரீநகரில் சில இடங்களில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்

Published On 2019-08-18 11:51 GMT   |   Update On 2019-08-18 11:51 GMT
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் வன்முறை வெடித்ததால் மீண்டும் அவைகள் அமலுக்கு வந்தன.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதும், வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் இருக்க மத்திய அரசு தகவல் தொடர்பு உள்பட பல தடைகளை அமல்படுத்தியது. குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்திற்குப் பிறகு பெரும்பாலான இடங்களில் தடைகளை தகர்த்தியுள்ளது. ஜம்மு, லடாக் போன்ற பகுதியில் மக்கள் இயல்பான நிலைக்கு திரும்பினாலும் ஸ்ரீநகர், பள்ளத்தாக்கில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் 35 காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் தொலைத்தொடர்பு உள்பட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.



இதனால் வெளியில்  வந்த இளைஞர்களுக்கும் பாதுகாப்பில் இருந்த போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் சில ஸ்ரீநகர் விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் பத்திரமாக வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News