செய்திகள்
பூடான் நாட்டிற்கு விமானத்தில் புறப்பட்ட மோடி

இரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி

Published On 2019-08-17 04:21 GMT   |   Update On 2019-08-17 04:21 GMT
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அண்டை நாடான பூடானுக்கு புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பூடான் செல்கிறார். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது, பூடான் நாட்டு பிரதமர் லோடே ஷெரிங்கை மோடி சந்தித்து பேச உள்ளார். பூடான் நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக்கையும் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா-பூடான் இடையே நீண்ட காலமாக நட்புறவு நீடித்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும், இந்த பயணம் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த சுற்றுப்பயணத்தின்போது, விண்வெளி, நீர்மின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News