செய்திகள்
பிரதமர் மோடி

முப்படைகளுக்கும் ஒரே தளபதி - பிரதமர் மோடி புதிய அறிவிப்பு

Published On 2019-08-15 05:52 GMT   |   Update On 2019-08-15 05:52 GMT
விரைவில் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

இன்று 6-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது சில அறிவிப்புகளை வெளியிட்டார். ராணுவத்துக்கு அவர் வெளியிட்ட அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நமது நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற பிறகு நமது நாட்டின் பாதுகாப்பு நிலை பற்றி ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. அதில் ராணுவ அமைச்சருக்கு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்குவதற்கு தலைமை தளபதி பதவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழுவும் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது. அப்போது தேசிய பாதுகாப்பு நடைமுறைக்கு தலைமை தளபதி பதவி அவசியம் என்பது உணரப்பட்டது. அமைச்சர்கள் குழுவும் ஒரே தளபதி முறையை கொண்டு வர பரிந்துரைத்துள்ளது.



கடந்த 2012-ம் ஆண்டு நரேஷ் சந்திரா குழுவும் தலைமை தளபதி பதவியை பரிந்துரைத்து இருந்தது. எனவே விரைவில் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

Similar News