செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2019-08-13 11:12 GMT   |   Update On 2019-08-13 11:12 GMT
ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை எல்லாம் உடனடியாக நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு பல பகுதிகளில் போலீசாரின் 144-விதியின்கீழான தடை உத்தரவு, கைபேசி இணைப்பு, இன்டர்நெட், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை எல்லாம் நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெஹ்சீன் பூனாவல்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்டோகி ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசுதரப்பில் ஆஜராகி வாதாடிய அட்டார்னி ஜெனரல், காஷ்மீரில் கடந்த 2016-ம் ஆண்டு பயங்கரவாதி புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டபோது அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்த நிலையை சுட்டிக் காட்டினார்.



தற்போது அதுபோல் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு அங்குள்ள நிலைமைகளை மத்திய அரசு தினந்தோறும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது. அங்கு   சட்டம்-ஒழுங்கை முதலில் சீரமைக்க வேண்டியுள்ளது. இதற்காகதான் அரசு சில தடைகளை விதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதைதொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மிகவும் உணர்ச்சிமயமானது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு சற்று அவகாசம் அளித்தாக வேண்டும்.

இந்த வழக்கு  உடனடியாக நீக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது. அதுவரை உயிர்கள் பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டதுடன் 2 வார அவகாசம் அளித்து இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News