செய்திகள்
பாஜகவின் சின்னத்துடன் கூடிய கொடி

பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் - டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது

Published On 2019-08-13 10:20 GMT   |   Update On 2019-08-13 10:20 GMT
மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



பாஜக தலைவர் அமித் ஷாவின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தீவிரமான பிரசார யுக்திகளால் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில்,  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் இன்று மாலை வெளியிட்டார்.

Tags:    

Similar News