செய்திகள்
அருண் ஜெட்லி

காங்கிரஸ் கட்சி தலை இல்லாத கோழி- அருண் ஜெட்லி வர்ணனை

Published On 2019-08-07 02:14 GMT   |   Update On 2019-08-07 02:14 GMT
தலை இல்லாத கோழியான காங்கிரஸ் கட்சி, மக்களிடமிருந்து தன்னை மேலும் அன்னியப்படுத்திக் கொண்டுவருகிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வர்ணித்துள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தநிலையில், அக்கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியை ‘தலை இல்லாத கோழி’ என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வர்ணித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

370-வது பிரிவு நீக்கம் பற்றி பா.ஜனதா வாக்குறுதி கொடுத்தபோது, அது சாத்தியமற்றது என்றே பலர் கூறினர். ஆனால், சாத்தியமற்றதை சாத்தியமாக்கி பிரதமரும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் வரலாற்றில் இடம்பிடித்து விட்டனர்.

இதற்கு மக்களிடையே கிடைத்த ஆதரவை பார்த்து, பெரும்பாலான கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், தலை இல்லாத கோழியான காங்கிரஸ் கட்சி, மக்களிடமிருந்து தன்னை மேலும் அன்னியப்படுத்திக் கொண்டுவருகிறது. வரலாறு மீண்டும் எழுதப்படும்போது, சியாம் பிரசாத் முகர்ஜியின் பார்வையே சரியானது, நேருவின் பார்வை தவறானது என்று நிரூபணமாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News