செய்திகள்
எடியூரப்பாவுடன் பெண் மேயர்

முதல் மந்திரிக்கு பரிசளித்த மேயருக்கு ரூ.500 அபராதமா?

Published On 2019-08-04 10:24 GMT   |   Update On 2019-08-04 11:03 GMT
கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநில முதல் மந்திரி எடியூரப்பாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பரிசளித்த பெங்களூரு நகர பெண் மேயருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பாவை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதுடன், பரிசுப் பொருட்களையும் அளித்து வருகின்றனர்.

அவ்வகையில், பெங்களூரு நகர மாநாகராட்சியின் மேயராக பதவி வகிக்கும் கங்காம்பிகே மல்லிகார்ஜுன் எடியூரப்பாவை சந்திக்க சென்றார். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கங்காம்பிகே மல்லிகார்ஜுன், கனிகள் மற்றும் உலர் கனிகள் கொண்ட சிறிய கூடை ஒன்றை பரிசாக அளித்து, புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.



இதற்காக, பெங்களூரு நகர மாநகராட்சி சார்பில் மேயர் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அளித்த பரிசு கூடையின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் உறை சுற்றப்பட்டிருந்ததால் அந்த நகரத்தின் மேயர் என்றும் பாராமல் கங்காம்பிகே மல்லிகார்ஜுனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News