செய்திகள்
இலவச வை-பை வசதி

கேரளாவில் 2 ஆயிரம் இடங்களில் இலவச வை-பை வசதி

Published On 2019-08-03 03:52 GMT   |   Update On 2019-08-03 03:52 GMT
கேரள மாநிலம் உருவான தினமான நவம்பர் 1-ந் தேதிக்குள் அம்மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வசதி வழங்க ‘கேபை’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோழிக்கோடு:

கேரள மாநிலம் உருவான தினமான நவம்பர் 1-ந் தேதிக்குள் அம்மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வசதி வழங்க ‘கேபை’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி பஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகள், அரசு வளாகங்கள், பூங்கா, பஞ்சாயத்து வளாகங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில கடலோர பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக கேரள மாநிலம் தகவல் தொழில்நுட்பம் இயக்கம் தொடங்கப்பட்டு, இதுவரை 1,887 இடங்களில் இலவச ‘வை-பை’ வசதிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற இடங்களிலும் இந்த பணி விரைவில் செய்து முடிக்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘டிஜிட்டல்’ கண்டுபிடிப்புகளை கேரளாவில் அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். அதன்படி, ஆண்ட்ராய்டு போன் அல்லது லேப்-டாப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 300 எம்.பி. வரை மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.

ஏற்கனவே, கேரளாவில் குறிப்பிட்ட சில ரெயில் நிலையங்களில், பயணிகளுக்கு இலவச ‘இன்டர்நெட்’ வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மற்ற ரெயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News