செய்திகள்
பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார்

குல்தீப் செங்கார் கட்சியில் இருந்து ஏற்கனவே சஸ்பெண்ட் -பாஜக தகவல்

Published On 2019-07-31 04:58 GMT   |   Update On 2019-07-31 05:09 GMT
உன்னாவ் பெண்ணின் பாலியல் வன்கொமை விவகாரத்துக்கு பின்னர், குல்தீப் செங்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில், பணி தொடர்பாக விசாரிக்க குல்தீப்பின் உதவி தேடி அவரது வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு, குல்தீப் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், இதற்காக நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு முன் அப்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இதையடுத்து கடந்த 28ம் தேதி அப்பெண் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இது திட்டமிட்ட கொலை முயற்சி என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உபி பாஜக தலைவர் சுவதந்திர தேவ் சிங் கூறுகையில், 'குல்தீப் செங்கார் மீதான பாலியல் பலாத்கார வழக்கு சிபிஐ விசாரணைக்கு பின்னரே, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.

இதனை முன்னாள் பாஜக தலைவர் உறுதி செய்வார். குற்றவாளிகளின் பக்கம் என்றுமே பாஜக நிற்காது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.



Tags:    

Similar News