செய்திகள்
குலதெய்வம் கோவிலில் வழிபாடு

முதல்வரான பின்னர் பிறந்த கிராமத்துக்கு சென்ற எடியூரப்பா - குலதெய்வம் கோவிலில் வழிபாடு

Published On 2019-07-27 08:55 GMT   |   Update On 2019-07-27 08:55 GMT
நான்காவது முறையாக கர்நாடக முதல் மந்திரியாக பதவியேற்ற எடியூரப்பா இன்று தனது பூர்வீக கிராமத்துக்கு சென்று சித்தலிங்கேஸ்வரா கோவிலில் வழிபாடு செய்தார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.

அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறையாக பதவியேற்ற எடியூரப்பா இன்று மண்டியா மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான பூக்கனேகேரே-வுக்கு வந்தார்.

பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த எடியூரப்பாவுக்கு அங்கு காவல் துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மண்டியா மாவட்ட பாஜக பிரமுகர்கள் சார்பிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய எடியூரப்பா, 'நான் பிறந்து வளர்ந்த இந்த இடத்தை பார்ப்பது எனது கடமையாகும்' என்று குறிப்பிட்டார்.  

பின்னர், அந்த கிராமத்தில் உள்ள தங்களது மூதாதையர்களின் குலதெய்வமான சித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
Tags:    

Similar News