செய்திகள்
பனி லிங்கம்

அமர்நாத் யாத்திரை: பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

Published On 2019-07-26 12:24 GMT   |   Update On 2019-07-26 12:24 GMT
அமர்நாத் யாத்திரையில் பனிலிங்கத்தை தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 46 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் யாத்திரை  முடிவடைகிறது.

இந்நிலையில், அமர்நாத் யாத்திரையில் இந்த ஆண்டுக்கான நேற்றைய நிலவரப்படி (ஜூலை 25) மொத்தம் மூன்று லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News