செய்திகள்
புலியை தாக்கும் கிராம வாசிகள்

உபியில் புலியை அடித்தே கொன்ற கொடூர சம்பவம் -வீடியோ எடுத்த மக்கள்

Published On 2019-07-26 10:11 GMT   |   Update On 2019-07-26 10:25 GMT
உத்திரபிரதேசத்தில் புலி ஒன்றினை கிராம மக்கள் அடித்துக் கொல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லக்னோ:
 
உத்தரபிரதேசத்தின் லக்னோவிலிருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ளது மடைனா எனும் கிராமம். இந்த கிராமம் பிலிபிட் புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஒருவரை சமீபத்தில், அங்கிருந்த புலி தாக்கியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிராம வாசியை தாக்கிய அந்த புலி 6 வயதே ஆனதாகும். வனத்தில் சுற்றி திரிந்த அந்த புலியை கிராம வாசிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

கம்புகளால் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சரமாரியாக புலியை தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தவுடனே சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்துள்ளனர். ஆனால் ஆத்திரம் தீராத கிராம வாசிகள் புலியை சூழ்ந்துக் கொண்டு அது இறக்கும் வரை அடித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.



வலி தாங்க முடியாமல் புலி தடுமாறி உள்ளது. இறுதியில், விலா எலும்புகள் மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் இறந்து விட்டது. புலியின் உடல் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட 31 கிராமவாசிகள் மீது உள்ளூர் வன அதிகாரிகள்  எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். பிலிபிட் புலிகள் காப்பகத்தில் 2012ம் ஆண்டு முதல் 16 புலிகள் கொல்லப்பட்டுள்ளது. ஆனால், கிராமவாசிகள் புலியை அடித்துக் கொன்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News