செய்திகள்
லால்பகதூர் சாஸ்திரி

லால்பகதூர் சாஸ்திரி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? - மத்திய அரசு பதில்

Published On 2019-07-25 03:19 GMT   |   Update On 2019-07-25 03:19 GMT
முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படுமா என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ஜனசங்க தலைவர்கள் சியாம் பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது மறைவு குறித்து விசாரணை நடத்தப்படுமா? என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் அகாலி தள உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, “இதுதொடர்பாக சமீபத்தில் சில கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், அப்படி விசாரணை நடத்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று கூறினார்.

அதுபோல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு விமான விபத்துக்கு பிறகு ரஷியாவுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுவது தொடர்பாக தங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்று ரஷியா தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற மக்களவையில் மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.முரளீதரன் கூறினார்.

Tags:    

Similar News