செய்திகள்
பாம்பை கடிக்கும் நபர் (மாதிரிப்படம்)

நீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன?

Published On 2019-07-17 04:28 GMT   |   Update On 2019-07-17 04:28 GMT
குஜராத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்துள்ளார். இருவரும் மோதியதில் கடைசியாக நடந்தது என்ன? என்பதை பார்ப்போம்.
வாரணாசி:

குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா(60). இவர் நேற்று சோள கருதுகளை ஏற்றும் லாரிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர் அருகே எங்கிருந்தோ வந்த பாம்பு, காலாவின் கை மற்றும் முகத்தில் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த காலா, பாம்பை உடனடியாக பிடித்து கடித்து விட்டார்.



அவர் ஆக்ரோஷமாக கடித்ததில் பாம்பு இறந்து விட்டது. காலாவை கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை வாய்ந்தது என்பதால் அங்கிருந்தவர்கள் காலாவை உடனடியாக லுனவாடா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு காலாவுக்கு சிறிது நேரம் சிகிச்சை செய்யப்பட்டது. இறுதியில் பாம்பின் விஷத்தன்மை கடுமையாக ஏறியதால் குணப்படுத்த இயலவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி காலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அஜன்வா பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News