செய்திகள்
வெள்ளத்தில் அசாம்

அசாமில் 8.6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு - 3 பேர் உயிரிழப்பு

Published On 2019-07-12 15:49 GMT   |   Update On 2019-07-12 15:49 GMT
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 21 மாவட்டங்களில் 8.6 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில் மழைசார்ந்த விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பிரம்மப்புத்திரா உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 21 மாவட்டங்களுக்குட்பட்ட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் சுமார் 8 லட்சத்து 69 ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோலாகட் மற்றும் சிமா ஹசாவ் மாவட்டங்களுக்குட்பட்ட சில இடங்களில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தின் விளைவாக நிலச்சரிவும் ஏற்பட்டது.

இன்றைய நிலவரப்படி மழைசார்ந்த விபத்துகளில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News