செய்திகள்
ப சிதம்பரம்

பொருளாதார ஆய்வறிக்கை ஊக்கம் தரும் வகையில் இல்லை -ப.சிதம்பரம்

Published On 2019-07-05 04:44 GMT   |   Update On 2019-07-05 04:44 GMT
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை ஊக்கம் தரும் வகையில் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புது டெல்லி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி, 2019-20-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அப்போதைய நிதி மந்திரி பியூஸ் கோயல், பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.

தேர்தல் நடந்து முடிந்து, பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.

பதவி ஏற்ற சூட்டோடு சூடாக அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். இதையடுத்து இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசுகிறார்.



இது அவரது முதல் பட்ஜெட் ஆகும். இந்நிலையில் நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து முன்னாள் நிதி மந்திரியான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், ‘பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம், வருவாய் குறைவு, கச்சா எண்னெய் விலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் ஊக்கம் தரும் வகையில் இல்லை.

நடப்பு நிதி ஆண்டில் 7% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என சரியான பிரிவு வாரியான வளர்ச்சி கணக்கெடுப்பு இல்லாமல் பொதுவாக ஒரு அறிக்கை இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த பட்ஜெட் நல்லதாக அமையுமா? அமையாதா? என்கிற பயம் எனக்கு உள்ளது’ என கூறியுள்ளார்.  
Tags:    

Similar News