செய்திகள்
பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் பேருந்து

400 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு

Published On 2019-07-01 09:54 GMT   |   Update On 2019-07-01 09:54 GMT
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் அரசு பேருந்து, 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிம்லா:

இமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டம், ஜின்ஜாரி என்ற இடத்தில் இன்று மாணவர்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 400 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில்  பேருந்து கடுமையாக சேதம் அடைந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பஸ் கண்டக்டர் மற்றும் 5 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். 

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர்  ஜெய் ராம் தாக்கூர், மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார்.

சாலையின் ஒரு பக்கத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அரசுப் பேருந்து மற்றொரு புறம் வழியாக சென்றுள்ளது. விபத்தைத் தவிர்ப்பதற்காக சாலை ஓரத்தில் எந்தவிதமான விபத்துத் தடையும் அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கினர். 
Tags:    

Similar News