செய்திகள்

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா

Published On 2019-06-24 04:17 GMT   |   Update On 2019-06-24 04:17 GMT
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சாரியா தனது பதவிக்காலம் முடியும் முன்னரே இன்று ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகள், பங்கு பரிவர்த்தனை வர்த்தகம், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அன்னிய செலாவணி நடமாட்டம் ஆகியவற்றை கண்காணித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளையும் மத்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.

மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்ததாஸ் பதவி வகிக்கிறார். துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சாரியா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

2017-ம் ஆண்டில் இந்த பொறுப்பையேற்ற விரால் ஆச்சாரியாவின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அவரது ராஜினாமா தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

உர்ஜித் பட்டேலுடன் விரால் ஆச்சாரியா

மத்திய அரசுடன் நிலவிய மோதல்போக்கு காரணமாக ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக முன்னர் பதவி வகித்த உர்ஜித் பட்டேல் தனது பதவிக்காலத்தின்போதே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார். அவரது வழியை விரால் ஆச்சாரியா தற்போது பின்பற்ற காரணம் என்னவாக இருக்கும்? என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.

Tags:    

Similar News