செய்திகள்

தெலுங்கானா தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு

Published On 2019-06-18 09:35 GMT   |   Update On 2019-06-18 09:35 GMT
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஐதராபாத்:

செலவை குறைக்க பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு ஆன செலவு குறித்து சி.எம்.எஸ். என்ற அமைப்பு (சென்டர் பார் மீடியா ஸ்டடி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. நல்கொண்டா, செவல்லா மற்றும் மல்கஜ்ஜிரி ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ்- தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வேட்பாளர்கள் தலா ரூ.40 கோடி வீதம் செலவிட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ரூ.68 கோடிக்கணக்கில் வராத பணம் மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் ரூ.60 கோடி ரொக்கப் பணம் ரூ.5 கோடி மதிப்பிலான சாராயம் மற்றும் 3 கோடி போதை பொருட்கள் அடங்கும்.

அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு இம்மாநிலத்தில் குறைந்த அளவிலே செலவு செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஏனெனில் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி அரசு விவசாயிகளுக்கு கடன் உதவி, பெண்கள் மற்றும் முதியோருக்கு உதவித்தொகை உள்ளிட்ட முக்கியமான பல திட்டங்களை தேர்தல் நேரத்தில் நடைமுறைப்படுத்தியது. அதனால் அதிக அளவில் செலவிடப்படவில்லை என சி.எம்.எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.9 ஆயிரம் கோடி வரை செலவாகியுள்ளது.

கடப்பா, அனந்த்பூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர் ஆகிய தொகுதிகளில் அதிக அளவில் பணம் செலவிப்பட்டுள்ளது.
Tags:    

Similar News