செய்திகள்

அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை

Published On 2019-06-16 10:09 GMT   |   Update On 2019-06-16 10:09 GMT
முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு பாஜக முன்னாள் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பிறந்தார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். அப்துல் கலாம் அவர்கள் 2015-ம் ஆண்டு ஜூலை 27ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

இதனை தொடர்ந்து அப்துல் கலாம் பிறந்தநாளான அக்டோபர் 15-ந் தேதியை உலக மாணவர் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என ஐநா அறிவித்தது. 



இந்நிலையில், அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாகவும் அறிவிக்க வேண்டுமென பாஜக முன்னாள் எம்.பி. ஆனந்த் பாஸ்கர் ரபோலு  மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
Tags:    

Similar News