செய்திகள்

பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Published On 2019-06-15 16:15 GMT   |   Update On 2019-06-15 16:15 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரபல பிஸ்கட் தொழிற்சாலையில் இருந்து 26 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்டனர்.
ராய்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பார்லே-ஜி என்ற பிரபல பிஸ்கட் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து அந்நிறுவனத்தில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியமர்த்தப்பட்டிருந்த 26 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். 



இதனையடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்ட 26 குழந்தைகளும், 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் வரை சம்பளம் கொடுத்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News