செய்திகள்

அலிகார் சிறுமி டுவிங்கிள் கொலை சம்பவம் -உருகும் பாலிவுட் பிரபலங்கள்

Published On 2019-06-07 09:18 GMT   |   Update On 2019-06-07 12:24 GMT
உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் டுவிங்கிள் எனும் 3 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து பாலிவுட் பிரபலங்கள் உருக்கமான பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது பெண் குழந்தை டுவிங்கிள் சர்மா (வயது 3) கடந்த மே மாதம் 31ம் தேதி மாயமானது. 

இதையடுத்து குழந்தையின் தாய், தந்தை இருவரும் அருகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தேடியுள்ளனர். கிடைக்கவில்லை. டப்பால் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் ரம்ஜான் அன்று பன்வாரிலால் வீட்டின் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவு பணியாளர்களிடம் கூறியுள்ளனர்.

பின்னர் குப்பை தொட்டியினை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் காணாமல் போன டுவிங்கிளின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் வருவதற்குள், தகவலறிந்த டுவிங்கிளின் உறவினர்கள் குழந்தையின் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் வந்தவுடன் குழந்தையின் உறவினர்களுடன் பேசி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் குழந்தை கொல்லப்பட்ட விதம் தான் கொடூரமானது. குழந்தையின் ஒரு பக்க கண் தோண்டப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்ட நிலையில்  கொன்றுள்ளனர்.

இதற்கான காரணம் என்ன என்பதை போலீசார் விசாரித்தபோது, பன்வாரிலால் ஒருவரிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.30 ஆயிரம் திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், ரூ.10 ஆயிரம் மீதம் கொடுக்க வேண்டும்.

இதனை தராத காரணத்தினால் அவரது குழந்தையை கடத்தி கொடூரமாக கொன்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.    

இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக சாகித் மற்றும் அவருக்கு உதவிய அஸ்லாம் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் குழந்தையை தாங்கள் கொன்றதாகவும் ஒப்புக் கொண்டனர். 




இந்நிலையில் டுவிங்கிளின் தாய் ஷில்பா ஷர்மா கூறுகையில், ‘நான் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரிடமும் ஒன்றை வேண்டுகோளாக கூறிக் கொள்கிறேன். 



என் மகள் இறக்க காரணமாக இருந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். 7 ஆண்டுகள் கழித்து வந்தால் மீண்டும் இருவரும் இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுவர்’ என கூறியுள்ளார்.



இந்த சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் நியாயம் கேட்டு பல்வேறு தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். மேலும் '#JusticeForTwinkle' எனும் ஹேஷ்டாக் வைரலாகியுள்ளது.



இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் அனுபம் கெர், சோனம் கபூர், டுவிங்கிள் கண்ணா, பாட்ஷா ஆகியோரும் '#JusticeForTwinkle' எனும் ஹேஷ்டாக் உள்ள பதிவுகளை வெளியிட்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News