செய்திகள்

காஷ்மீரில் தர்பார் மாற்றம் - இன்று முதல் ஸ்ரீநகரில் தலைமைச் செயலகம் இயங்கும்

Published On 2019-05-06 10:17 GMT   |   Update On 2019-05-06 10:17 GMT
வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்து ‘தர்பார் மாற்றம்’ பழக்கப்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைமைச் செயலகம் இன்று முதல் ஸ்ரீநகரில் இயங்கத் தொடங்கியுள்ளது. #DarbarMove #Srinagarsecretariat
ஸ்ரீநகர்:

இந்தியாவை ஆண்டு வந்த வெள்ளையர்கள் ஜம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாத குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் அறிவித்தனர்.

இப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தலைநகரத்தை மாற்றும் நிகழ்வு ‘தர்பார் மாற்றம்’ என்று அழைக்கப்பட்டது. மாநில கவர்னர் மாளிகை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவது சுமார் 150 ஆண்டுகால நடைமுறையாக இருந்து வருகிறது.



இதன்படி, கடந்த ஆறுமாத காலமாக குளிர்கால தலைநகர் ஜம்முவில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலகம் கடந்த மாதம் 28-ம் தேதி மூடப்பட்டது. இன்று முதல் ஸ்ரீநகரில் இயங்கத் தொடங்கியுள்ளது.

இதற்காக, இவ்வளவு நாள் ஜம்முவில் பணியாற்றிவந்த அரசு அதிகாரிகள் ஸ்ரீநகருக்கு திரும்பியுள்ளனர். #DarbarMove #Srinagarsecretariat 
Tags:    

Similar News