செய்திகள்
ஹன்சிகா சுக்லா - கரிஷ்மா அரோரா

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் காசியாபாத், முசாபர்நகர் மாணவிகள் முதலிடம்

Published On 2019-05-02 09:58 GMT   |   Update On 2019-05-02 10:14 GMT
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் காசியாபாத், முசாபர்நகர் மாணவிகள் 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தனர். #CBSE #CBSE12thResults #HansikaShukla #KarishmaArora
புதுடெல்லி:

நாடு முழுவதும் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இதில், 12ம் வகுப்பு தேர்வில், 12.05 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். இன்று 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களான, cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்களுடன் காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி ஹன்சிகா சுக்லா, முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா அரோரா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

ரிஷிகேசைச் சேர்ந்த கவுரங்கி சவாலா, ரேபரேலியின் ஐஸ்வர்யா, ஜிந்த் பகுதியைச் சேர்ந்த பவ்யா ஆகியோர் 498 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். டெல்லியின் நீரஜ் ஜிண்டால், மேகக் தல்வார் உள்ளிட்ட 18 மாணவர்கள் மூன்றாம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். #CBSE #CBSE12thResults #HansikaShukla #KarishmaArora
Tags:    

Similar News