செய்திகள்

நெருங்கும் பானி புயல்- ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் பணியாற்றும் 500 ஊழியர்கள் வெளியேற்றம்

Published On 2019-05-02 08:44 GMT   |   Update On 2019-05-02 08:44 GMT
பானி புயல் ஒடிசாவை நெருங்கி வரும் நிலையில், கடற்பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறுகளில் பணியாற்றும் 500 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். #CycloneFani #ONGC
புதுடெல்லி:

வங்கக் கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை மதியம் புரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 210 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடலோர பகுதிகள் மற்றும் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 8  லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓஎன்ஜிசி, வங்கக் கடலில் உள்ள தனது எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 500 பேரை வெளியேற்றி உள்ளது. இயந்திரங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி உள்ளது. #CycloneFani #ONGC
Tags:    

Similar News