செய்திகள்

3-வது கட்ட தேர்தல் - வயநாடு உள்பட 116 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு

Published On 2019-04-22 14:18 GMT   |   Update On 2019-04-22 14:18 GMT
பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக நடக்கவுள்ள 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. #LokSabhaElections2019
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்தது.

3-வது கட்ட வாக்குப்பதிவு நாளை (செவ்வாய்கிழமை) நடக்கிறது.

3-வது கட்டத்தில் 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கர் (7), குஜராத் (26), கோவா (2), ஜம்முகாஷ்மீர் (1), கர்நாடகா (14), கேரளா (20), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்குவங்காளம் (5), தத்ரா நகர் கவேலி (1), டாமன் டையூ (1).

இந்த 116 தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் நாளை ஓட்டுப்பதிவை ராகுல் காந்தி சந்திக்கிறார்.

இதே போல பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் நாளை தேர்தலை எதிர்கொள்கிறார். அவர் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் களம் காண்கிறார். இந்த தொகுதி மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கானது. அவரை ஒரங்கட்டிவிட்டு அமித்ஷா தற்போது போட்டியிடுகிறார். குஜராத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேபோல சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனகார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் நாளைய தேர்தல் களத்தில் உள்ளனர். #LokSabhaElections2019
Tags:    

Similar News