செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் 33 சதவீதம் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் - ஒடிசா முதல்வர் அறிவிப்பு

Published On 2019-03-10 10:25 GMT   |   Update On 2019-03-10 10:25 GMT
பாராளுமன்ற தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் 33 சதவீதம் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabhaticket
புவனேஸ்வர்:

பீகார் மாநில அரசு மகளிர் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், கேந்திரபாரா நகரில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு விழாவில் பங்கேற்று பேசிய ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், 'பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் 33 சதவீதம்  தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்’ என அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabhaticket
Tags:    

Similar News