செய்திகள்

ரோட்ரோலரில் வந்து மணமகளுக்கு தாலிகட்டிய மணமகன்-மேற்கு வங்காளத்தில் ருசிகர திருமணம்

Published On 2019-01-28 08:51 GMT   |   Update On 2019-01-28 08:51 GMT
மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் திருமணமனத்திற்காக மணமகன் ரோட்ரோலரில் வருகை தந்துள்ளார். #roadrollermarriage
கிரிஷ்நகர்:

மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நேற்று அக்ரா பத்ரா மற்றும் அருந்ததி தராஃப்தார் ஆகியோருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக மணமகள் வீட்டுக்கு மணமகனை  குதிரை அல்லது காரில் ஏற்றி வருவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், இதனை மாற்றி புது முறையில் அக்ரா பத்ரா வருகை தந்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மணமகன் அக்ரா , ‘எனது திருமணத்தை வித்தியாசமான  முறையில் நடத்த விரும்பினேன். ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இதுபோன்று ஜேசிபி வாகனத்தில் தம்பதிகள் திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். இதனால், சாலையை மிதித்து கடினமாக்கும் ‘ரோட்ரோலர்’ வாகனத்தில் மணமகள் வீட்டுக்கு செல்ல நினைத்தேன்.



நான் நினைத்திருந்தால் விலை மதிப்பு மிக்க சொகுசு கார்களில் ‘மாப்பிள்ளை ஊர்வலம்’ சென்றிருக்க முடியும். ஆனால், அது வழக்கமாக எல்லோரும் செய்வதுதான். இப்போது ரோட்ரோலர் வாகனத்தில் நான் மணமகள் வீட்டுக்கு சென்றது விரைவில் செய்தியாகும் வாய்ப்பும் உள்ளது’ என்றார்.

தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் இதேபோல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வித்தியாசமான முறையில் நடத்த அக்ரா பத்ரா திட்டமிட்டு வருகிறார். #roadrollermarriage

Tags:    

Similar News