செய்திகள்

திருப்பதியில் ரூ.3.28 கோடி உண்டியல் வசூல்

Published On 2018-12-19 10:17 GMT   |   Update On 2018-12-19 10:17 GMT
திருப்பதியில் நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்களின் காணிக்கையாக ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது. #tirupati
திருமலை:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது.

கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வைகுண்ட வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இன்று காலை வரை 81ஆயிரத்து 188 பேர் தரிசனம் செய்தனர். 16 ஆயிரத்து 462 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் வசூலானது.

வைகுண்ட ஏகாதசி 2-வது நாளான துவாதசியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி சக்கரத்தாழ்வார் இன்று அதிகாலை மாடவீதிகளில் கொண்டுவரப்பட்டு வராகசாமி கோவிலில் வைத்து பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் நடந்தது.

இதையடுத்து கோவில் அருகில் உள்ள தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  #Tirupati
Tags:    

Similar News