செய்திகள்

சத்தீஸ்கர் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் மழையினால் மாற்றம்

Published On 2018-12-17 11:13 GMT   |   Update On 2018-12-17 11:41 GMT
சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது. #Chhattisgarh #BhupeshBaghel
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் பதவியேற்க உள்ளார்.



இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது.

முதல்மந்திரி பதவியேற்பு விழா அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பெய்ட்டி புயல் காரணமாக பெய்து வரும் மழையால் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள் விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #BhupeshBaghel #Chhattisgarh
Tags:    

Similar News