செய்திகள்

வயலில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைலட்

Published On 2018-11-21 10:11 GMT   |   Update On 2018-11-21 10:11 GMT
தெலுங்கானா மாநிலத்தில் சிறுரக பயிற்சி விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். #PlaneCrash
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று சிறுரக பயிற்சி விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். மோகிலா கிராமத்தின் அருகே பறந்தபோது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அருகில் உள்ள வயல்வெளியில் விமானத்தை தரையிறக்கினார் விமானி. ஆனால், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் வேகமாக மோதியபடி தரையிறங்கியது. இதில் விமானம் நொறுங்கியது. எனினும் விமானத்தை ஓட்டி வந்த விமானி, லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.


ஐதராபாத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி விமான பயிற்சி நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் சமீபத்தில்தான் வாங்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணயில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது. #PlaneCrash
Tags:    

Similar News