search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் விபத்து"

    • மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர்.
    • விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

    ஒட்டலா:

    கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய பயணிகள் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்துடனான தொடர்பு துண்டானது.

    இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் பாராசூட் மூலம் சென்று தேடினர். அப்போது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

    இந்த விமான விபத்தில் 6 பேர் பலியானார்கள். ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஒரு குழுவை நியமித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    சூரத்கார்:

    ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் வான் வெளியில் தாறுமாறாக பறந்தது. உடனே அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். உடனே அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது.

    இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விமானம் விழுந்ததில் அந்த வீடு முற்றிலும் தேசம் ஆனது. பாராசூட்டில் குதித்ததால் விமானி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    சத்தம் கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். விபத்து குறித்து கேள்வி பட்டதும் போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    விமானத்தின் சிதறிய பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் என்ன வென்று தெரிய வில்லை. விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

    • பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்றில் 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்குள்ள பிக் பியர் என்ற குடியிருப்பு பகுதி அருகே விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது, விமானம் திடீரென விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

    இதையடுத்து, தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், பிக் பியர் பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை கண்டுபிடித்தனர்.

    இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து.
    • விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த விமானி ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த மற்றொரு பயிற்சி விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார்.

    மேலும் அவர், "இந்த விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

    திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. #AirIndia
    திருச்சி :

    திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 130 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்ததால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவரில் மோதிவிட்டு தொடர்ந்து பறந்தது. 

    மேலும், சுவருடன் சேர்ந்து அருகே இருந்த ஐஎல்எஸ் ஆண்டனா மீதும் உரசி சென்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. ஐஎல்எஸ் ஆண்டனாவும் நொறுங்கியது. 

    இந்த எதிர்பாரா விபத்து காரணமாக விமானத்தில் லேசான அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து பறந்த விமானம், பின்னர் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 

    இதனால் விமானத்தில் பயணித்த 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia 
    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு இன்று புறப்பட்ட விமானம் ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம் பலத்த சேதமடைந்தது. #SrilankanAirlines
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியிலிருந்து இலங்கை கொழும்புக்கு 227 பயணிகளுடன் இன்று மாலை ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது.

    இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    ×