என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானி பலி"

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
    • இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
    • கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா சிமி பள்ளத்தாக்கில் உள்ள வுட்ராஞ்சல் பகுதியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

    இந்த விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உயிர் இழந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விமானம் விழுந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினார்கள். இதில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புனேவுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தை விமானி மனோஜ் சுப்பிரமணியம் (வயது40) என்பவர் இயக்க இருந்தார்.

    மதியம் 12 மணியளவில் விமான நிலையத்தில் புறப்பாடு வாசல் பகுதியில் மனோஜ் சுப்பிரமணியம் நின்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் விமான ஊழியர்கள் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் அதனை இயக்க இருந்த விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இறந்து போன விமானி மனோஜ் சுப்பிரமணியத்தின் சொந்த ஊர் சென்னை ஆகும். அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மனோஜ் சுப்பிரமணியம் இயக்க வேண்டிய விமானத்தில் 214 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 15 நிமிடம் தாமதமாக மாற்று விமானி மூலம் அந்த விமா னம் புறப்பட்டு சென்றது.

    இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நாக்பூரில் எங்களது விமானி உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம். விமான நிலையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது துரதிருஷ்ட வசமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து தோகா சென்ற பயணிகள் விமானத்தில் மூத்த விமானி உடல்நலக் குறைவால் உயிரிழந்து உள்ளார்.

    • விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது
    • விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டது.

    இதில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் சென்றனர். அந்த விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கியது.

    இதில் பயிற்சி விமானிகள் 2 பேரும் உயிரிந்தனர். விமான விபத்து குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜப்பான் கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷியாவின் இரு Su-34 ரக போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலியான ஒரு விமானியின் உடல் மீட்கப்பட்டது. #Su34 #Su34crash
    மாஸ்கோ:

    ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.

    கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தது.

    இந்த விபத்தில் இரு விமானிகளும் அவசர வாசல் வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக நேற்று தகவல் வெளியானது. 

    3 விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் 5 கப்பல்களில் சென்று விபத்து நிகழ்ந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் ஒரு விமானியின் உடலை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு விமானியை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Su34 #Su34crash 
    குஜராத் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் வெடித்து சிதறியதில் விமானி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jaguarcrash #Sanjaychauhan
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் ஜம்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி முகாம் உள்ளது. இந்நிலையில், இன்று காலை விமானப்படை வீரர் சஞ்சய் சவுகான் வழக்கமான பயிற்சி ஈடுபட்டிருந்தார். விமானம் பரிஜா கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் பயணம் செய்த ஜாகுவார் போர் ஜெட் விமானம் சுமார் 10.30 மணியளவில் வெடித்து சிதறியது. விமானத்தின் பாகங்கள் கிராமத்தின் பல இடங்களில் சிதறி விழுந்தன.


    விபத்தில் படுகாயமடைந்த விமானி சஞ்சய் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.  #Jaguarcrash #Sanjaychauhan

    ×