என் மலர்tooltip icon

    இந்தியா

    Air India Plane Crash... விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்... பின்னணி என்ன?
    X

    Air India Plane Crash... விமான விபத்தை முன்கூட்டியே விளம்பரமாக வெளியிட்ட நிறுவனம்... பின்னணி என்ன?

    • விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
    • பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

    இந்த விமானத்தில் பல கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட டாக்டர், அவரது மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், லண்டனில் படிக்கும் கணவனை காண புறப்பட்ட புதுப்பெண்ணும், மகளை காண லண்டனுக்கு புறப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி என பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே விமானம் விபத்து தொடர்பான தகவல்கள் அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.



    இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசித்திரமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று காலை Mid- day ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஏர் இந்தியா விமானம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்ஜானியாவின் தந்தையர் தின நிகழ்வை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் சிக்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து பிற்பகலில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட காட்சியை உண்மையில் நிகழ்ந்திருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.



    விமான விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தற்செயல் நிகழ்வு வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை நினைவூட்டுகிறது.

    Next Story
    ×