செய்திகள்

டெல்லியில் மாட்டு வண்டியில் சென்று மத்திய மந்திரி போராட்டம்

Published On 2018-10-07 12:21 GMT   |   Update On 2018-10-07 12:21 GMT
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தவறிவிட்டதாக குறிப்பிட்ட மத்திய மந்திரி விஜய் கோயல் இன்று மாட்டு வண்டியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். #VijayGoel #petroldieselprice
புதுடெல்லி :

பெட்ரோல் டீசல் விலையில் மத்திய அரசு ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 1 குறைத்ததை அடுத்து மாநில அரசுகளும் விலை குறைப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி சமீபத்தில் வலியுறுத்தினார்.

அவரின் வலியுறுத்தலை ஏற்று மகாராஷ்டிரா, அரியானா, அசாம் உள்ளிட்ட பாஜகவின் ஆட்சி நடைபெறும் பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தவறிவிட்டதாக மத்திய மந்திரி விஜய் கோயல் மாட்டு வண்டியில் சென்று போராட்டம் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.  இப்போது மத்திய அரசு விலையை குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது, அதே போன்று மக்களின் சுமையை குறைக்கும் வகையில் டெல்லி மாநில அரசு விலை குறைப்பு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என அவர் குற்றம்சாட்டினார்.

இந்த போராட்டத்தின் போது மாநில அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பாஜகவினர் கோஷம் எழுப்பினர். #VijayGoel #petroldieselprice
Tags:    

Similar News