செய்திகள்

மகாராஷ்டிரா சிறையில் உள்ள பெண் கைதிகள் குடும்பத்தாருடன் பேச இலவச வீடியோ காலிங் வசதி

Published On 2018-10-07 11:42 GMT   |   Update On 2018-10-07 11:42 GMT
நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா சிறைகளில் உள்ள பெண் கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக இலவச வீடியோ காலிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை :

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் சிறைக்கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் பேசுவதற்காக இலவச வீடியோ காலிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக மகாராஷ்டிராவில் தான் கொண்டுவரப்படுகிறது, கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலிங் மூலம் 5 நிமிடங்கள் பேசலாம். அதற்காக அவர்களிடம் இருந்து ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.

முதலில் புனேவில் உள்ள ஏரவாடா மத்திய சிறையில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாநிலம் முழுதும் உள்ள பெண் கைதிகள் மற்றும்  திறந்தவெளி சிறைச்சாலை கைதிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக கைதிகள் தங்களின் குடும்பத்தினருடன் மட்டுமே பேச முடியும், குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. வீடியோ காலிங் வசதி மூலம் பேசும் போது காவலர் ஒருவர் கைதியை கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News