செய்திகள்

பெண்களின் ஆதரவு இல்லாமல் இந்தியா வளர்ச்சி அடையாது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Published On 2018-09-29 17:17 GMT   |   Update On 2018-09-29 17:17 GMT
ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், பெண்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது என கூறியுள்ளார். #MohanBhagwat #RSS
ஜெய்ப்பூர்  :

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இன்று நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ’குடும்ப விவகாரங்களை பெண்கள் கையாண்டு வருவதும், பெரிய துறைகளில் பெண்கள் தலைவர்களாக செயல்படுவதும் நல்ல ஒரு அடையாளம். பெண்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல.  அவர்களின் ஆதரவின்றி நாடு வளர்ச்சி அடையாது.

தற்போது மக்கள் தங்கள் மனநிலையை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பெண்களை அவர்கள் அடிமைகளாக நடத்துவதற்கு பதிலாக பெண் கடவுளாக நடத்த வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பிற்கான கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  சட்டத்திற்கு என வரம்பு உள்ளது. பெண்கள் பாதுகாப்பு பற்றிய சமூக விழிப்புணர்வினை உருவாக்கவும் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான மதிப்பினை உயர்த்துவதற்காகவும் பொதுமக்கள் பணியாற்ற வேண்டும்’ என பகவத் தெரிவித்தார். #MohanBhagwat #RSS
Tags:    

Similar News