செய்திகள்

ஊழியர்களுக்கு பரிசாக ரூ.3 கோடி மதிப்புள்ள பென்ஸ் கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சியளித்த வைர வியாபாரி

Published On 2018-09-28 22:52 GMT   |   Update On 2018-09-28 22:52 GMT
தனது நிறுவனத்தில் விசுவாசமாக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து குஜராத் வைரவியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். #diamondtradergiftsMercedesBenz
அகமதாபாத் :

குஜராத் மாநிலம், சூரத்தில் ஹரே கிருஷ்னா எனும் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் சவ்ஜி தோலாகியா. இவரது நிறுவனத்தில்  தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலைசெய்த 3 ஊழியர்களுக்கு  தலா ரூ. ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து சவ்ஜி தோலாகியா இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

நிலேஷ் ஜடா(வயது40), முகேஷ் சந்திரபாரா (38), மகேஷ் சந்திரபாரா(38) ஆகிய 3 பேரும்  ஹரே கிருஷ்னா ஏற்றுமதி நிறுவனம் தொடங்கும் போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்து வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் தொடர்ந்து இங்குப் பணி செய்துள்ளனர்.

ஆரம்பத்தில் வைரம் பட்டை தீட்டும் பணியை செய்த இவர்கள் படிப்படியாக உயர்ந்து இப்போது நிறுவனத்தின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளனர்.

இதனால் அவர்களின் விசுவாசத்தை பாராட்டிய நிறுவன உரிமையாளர்  சவ்ஜி தோலாகியா, பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை பரிசாக அளித்தார்.

சூரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த 3 ஊழியர்களுக்கும் காரின் சாவியை குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் வழங்கினார். #diamondtradergiftsMercedesBenz
Tags:    

Similar News