செய்திகள்

கிர் வனப்பகுதியில் மர்மமான முறையில் 11 சிங்கங்கள் உயிரிழப்பு

Published On 2018-09-20 22:47 GMT   |   Update On 2018-09-20 22:56 GMT
குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 11 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Girforest
அகமதாபாத் :

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த வனப்பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கிர் வனத்துறையை சேர்ந்த கால்நடை மருத்துவர் வம்ஜா கூறுகையில், உயிரிழந்த சிங்கள் அனைத்தும் நுரையீரல் சார்ந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்த திடீர் நோய் தொற்று எதனால் ஏற்பட்டது என தெரியவில்லை. மீதம் உள்ள சிங்கங்ளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். #Girforest
Tags:    

Similar News