செய்திகள்

சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Published On 2018-09-20 12:14 GMT   |   Update On 2018-09-20 12:14 GMT
டெல்லியில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி, சிறப்புரையாற்றினார். #PMNarendraModi #IICC #Delhi
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமையவுள்ள சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

புதிதாக அமையவுள்ள இந்த மையத்தில் மாநாட்டுக்கான அரங்கம், கண்காட்சி அரங்கம், ஆலோசனைக்கூடம், விடுதிகள், சந்தை மற்றும் பணியாளர்களுக்கான அலுவலகம் ஆகிய அனைத்தும் ஒரே சுற்றுவட்ட எல்லைக்குள் அமையவுள்ளது.



அடிக்கல் நாட்டு விழாவைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்துக்கான மதிப்பு 26 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவித்தார். மேலும், 80 கோடி இளைஞர்களின் ஆற்றல் மற்றும் திறனுக்காக இந்த மையம் அமைக்கப்படுவதாகவும், இது மாநாடு மற்றும் கண்காட்சி மையம் மட்டுமன்றி, சர்வதேச தொழில் மையமாகவும் விளங்கும் எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தவுலா கவுன் என்ற இடத்தில் இருந்து துவாரகா வரையில் மெட்ரோ ரெயில் மூலம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMNarendraModi #IICC #Delhi
Tags:    

Similar News