செய்திகள்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம்

Published On 2018-09-14 11:03 GMT   |   Update On 2018-09-14 11:03 GMT
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எட்டு நாள் அரசு முறை பயணமாக செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா உள்ளிட நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #VenkaiahNaidu
புதுடெல்லி :

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய நிதித்துறை இணை மந்திரி சிவ் பிரதாப் சுக்லா, மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், பிரசன்னா ஆச்சாரியா, சரோஜ் பாண்டே மற்றும் மக்களவை உறுப்பினர் ராகவ் லகன்பால் உள்ளிடோர் அடங்கிய குழுவுடன் டெல்லியில் இருந்து அவர் புறப்பட்டு சென்றுள்ளார்.

தனது பயணத்தின் முதல்நாடாக நாளை செர்பியா சென்றடையும் வெங்கையா நாயுடுவிற்கு பாரம்பரிய  முறையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பிறகு அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் அவர்,  தலைநகர் பெல்கிரேடில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்சியிலும் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து, ரோமானியா, மால்டா நாடுகளுக்கு பயணம் செய்யும் வெங்கையா நாயுடு, செப்டம்பர் 21-ம் தேதி மீண்டும் தாயகம் திரும்ப உள்ளார். இந்த பயணத்தின் போது மூன்று நாடுகளின் தலைவர்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #VenkaiahNaidu
Tags:    

Similar News