செய்திகள்

2022-க்குள் ஊழலற்ற, ஏழ்மையற்ற, சாதி-மதமற்ற இந்தியா - பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்

Published On 2018-09-09 08:42 GMT   |   Update On 2018-09-09 08:42 GMT
டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழுவில் வரும் 2022-க்குள் ஊழலற்ற, ஏழ்மையற்ற, சாதி-மதமற்ற, பயங்கரவாதமற்ற இந்தியாவை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #BJPNEC2018 #corruptionfreeIndia #India2022
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கிய பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

கடந்த நான்காண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்னேற்றப் பணிகளை செய்து முடித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஊழலற்ற, ஏழ்மையற்ற, சாதி-மதமற்ற, பயங்கரவாதமற்ற இந்தியாவை உருவாக்கவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


புதிய இந்தியாவை வடிவமைக்கும் செயல்திட்டத்தை உருவாக்கிய பிரதமர் மோடியை பாராட்டி மத்திய உள்துறை மந்திரி கொண்டுவந்த இந்த அரசியல் தீர்மானத்தை இமாச்சலப்பிரதேசம் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டவர்கள் வழிமொழிந்தனர்.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்த ராஜ்நாத் சிங் ‘வாருங்கள்! நாடெங்கிலும் தாமரையை மலரச் செய்வோம்’ என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்கள் மேஜைகளை தட்டியும், கரவொலி எழுப்பியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.  #BJPNEC2018 #corruptionfreeIndia #India2022
Tags:    

Similar News