செய்திகள்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிரம்மாண்ட பேரணி தொடங்கியது

Published On 2018-09-02 12:23 GMT   |   Update On 2018-09-02 12:23 GMT
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தொண்டர்கள் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. #TelanganaAssembly #ChandrasekharRao
ஐதராபாத் :

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தொடக்க விழா மற்றும் தனி தெலுங்கானா மாநிலம் உதயமான விழா ஆகிய இருபெரும் விழாவை சிறப்பிக்கும் விதமாக ரங்காரெட்டி மாவட்டத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

மாநிலம் மற்றும் தேசிய அளவில் தனது செல்வாக்கை காட்டும் விதமாக சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணியில் தனது 4-ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூற உள்ளார். மேலும், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் தவிர்த்து மாநில கட்சிகள் அடங்கிய கூட்டணி தொடர்பான பிரகடணத்தையும் இந்த பேரணியில் அவர் அறிவிக்க உள்ளார்.

சுமார் 20 லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2,000 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வதற்காக சேர்கள், பந்தல்கள் போடப்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதியில் எங்கு நோக்கினும்  தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கொடியின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

முன்னதாக பிற்பகலில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் தெலுங்கானா சட்ட சபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக அலோசனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssembly #ChandrasekharRao
Tags:    

Similar News