செய்திகள்

கர்நாடகா - பசியால் வாடிய மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுக்களை தூக்கி எறிந்த மந்திரி

Published On 2018-08-20 19:01 GMT   |   Update On 2018-08-20 19:01 GMT
கர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அம்மாநில மந்திரி, பிஸ்கெட் பாக்கெட்டுக்களை தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. #KarnatakaFlood
பெங்களூர் :

கர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசி கொடுமையால் கதறி அழும் மக்களிடம், முகம் சுளிக்க வைக்க வகையில் அமைச்சர் ஒருவர் நடந்து கொண்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவரும் வேளையில், பசியால் வாடிவரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது போல் கர்நாடகாவிலும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக மந்திரியும், முதல்வர் குமாரசாமியின் அண்ணனுமான எச்.டி ரேவண்ணா எதோ ..... ரொட்டி துண்டுகளை தூக்கி வீசுவதை போல, பொதுமக்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியுள்ளார்.

இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அவருடைய சர்ச்சையான செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். #KarnatakaFlood
Tags:    

Similar News