செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரை தொடங்கியது

Published On 2018-08-19 07:32 GMT   |   Update On 2018-08-19 07:32 GMT
உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வார் நகரில் நடைபெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் யாத்திரையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். #AtalBihariVajpayee
டேராடூன்:

டெல்லியில் தகனம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் அடல் பிகாரி  வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்ட கலசங்கள் விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

அவ்வகையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசம் வைக்கப்பட்டு யாத்திரையாக கொண்டு செல்லப்பட்டது.


பன்னா லால் பல்லா நகராட்சி கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை பிரேம் ஆசிரமத்தை சென்றடையும். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் புனித நதியான கங்கையின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது.

தற்போது நடைபெற்றுவரும் அஸ்தி கலசம் யாத்திரையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர். #Vajpayee #AsthiKalashYatra #AtalBihariVajpayee
Tags:    

Similar News