செய்திகள்

கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் - காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்

Published On 2018-08-11 10:27 GMT   |   Update On 2018-08-11 10:27 GMT
கேரள கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட மாநில காங்கிரஸ் கட்சியினர் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaFloods2018 #KeralaFloods #KeralaRains #Rahul
புதுடெல்லி:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் இடிந்துள்ளன. கனமழை காரணமாக 29 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்திடுமாறு மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், ‘முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்த மழையினால் கேரளா பேரழிவை சந்தித்துள்ளது. பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் தங்களது வீடுகளை கைவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் என்னுடைய பிராத்தனைகளும், எண்ணங்களும் கேரள மக்களுடன் இருக்கும்’  என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #KeralaFloods2018 #KeralaFloods #KeralaRains #Rahul 
Tags:    

Similar News