செய்திகள்

50 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய போர் விமானம் - உறைந்த நிலையில் பிரேதம் கண்டெடுப்பு

Published On 2018-07-21 11:46 GMT   |   Update On 2018-07-21 11:46 GMT
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பனிமலையில் 1968-ம் ஆண்டு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் பலியானவரின் பிரேதம் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. #IAFPlaneCrash
சிம்லா:

இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-12 ரகப் போர் விமானம் கடந்த 7-2-1968 அன்று பஞ்சாப் மாநிலம், சண்டிகர் நகரில் இருந்து காஷ்மீரில் உள்ள லே பனிமலை பகுதியை நோக்கி 102 வீரர்களுடன் புறப்பட்டு சென்றது.

பருவநிலை சாதகமாக இல்லாததால் அந்த விமானத்தை சண்டிகர் நகருக்கு திருப்பி கொண்டுவர விமானி முயற்சித்த நிலையில் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த அந்த விமானம் திடீரென்று மாயமானது.

நீண்ட தேடலுக்கு பின்னர் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லாஹவுல் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு அந்த போர் விமானத்தின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இந்நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தாக்கா பனிமுகட்டில் தூய்மை பணியில் சில மலையேற்றக் குழுவினர் சமீபத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, 1968-ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பனிமலையில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் பலியானவரின் பிரேதம் உறைந்த நிலையில் 1-7-2018 அன்று கண்டெடுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதே பகுதியில் விமானத்தின் சில பாகங்களும் காணப்பட்டதாக மலையேற்ற குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.#IAFPlaneCrash #HimachalIAFPlaneCrash #FrozenBodyFound 
Tags:    

Similar News