செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வாக்குமூலம் அளித்தார் சுப்பிரமணியன் சுவாமி

Published On 2018-07-21 08:23 GMT   |   Update On 2018-07-21 08:23 GMT
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். #NationalHeraldCase #SubramanianSwamyStatement
புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை ஒப்பந்த விதிகளை மீறி, முறைகேடாக கையகப்படுத்தியதாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி கடன் பாக்கி வைத்திருந்தது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி இருக்கும். எனினும் சோனியா, ராகுல் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வெறும் 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி அந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் ஒரு பகுதியை நீதிபதி சமர் விஷால் பதிவு செய்துகொண்டார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் சுப்பிரமணியன் சுவாமி வாக்குமூலத்தின் மீதமுள்ள பகுதியும் பதிவு செய்யப்படும். #NationalHeraldCase #SubramanianSwamyStatement
Tags:    

Similar News