செய்திகள்

ஜனாதிபதி, பிரதமரின் கார்களாக இருந்தாலும் நம்பர் பிளேட் அவசியம் - டெல்லி ஐகோர்ட்

Published On 2018-07-18 20:20 GMT   |   Update On 2018-07-18 22:49 GMT
மோட்டார் வாகன சட்டத்தின்படி அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :

உயர்பதவிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் கார்களில் நம்பர் பிளேட்டுகளுக்கு பதிலாக அரசு சின்னம் இடம்பெற்றிருப்பது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நியாய பூமி எனும் அமைப்பின் சார்பில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி ஐகோர்டின் தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி அனைத்து வாகனங்களிலும் நம்பர் பிளேட் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். 

மேலும், உயர்பதவிகளில் இருப்பவர்களான ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, கவர்னர் மற்றும் துணை நிலை கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் உள்பட சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும். எனவே, தாங்கள் பயன்படுத்தும் கார்களில் சட்டப்படி நம்பர் பிளேட் இருக்கிறதா ? என்பதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  
Tags:    

Similar News